
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா உரிய பதிலடி கொடுக்கும் என பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அரமானே இன்று (ஜூலை 9) உறுதியளித்தார்.
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமானே கூறியதாவது, துணிச்சலான 5 வீரர்களை இழந்தது வருத்தம் அளிக்கிறது. வீரமரணம் அடைந்த தியாகிகளின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தன்னலமற்ற சேவை என்றும் நினைவுகூரப்படும். அவர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள் பழிதீர்க்கப்படுவார்கள். இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள தீய சக்தியை இந்தியா அழிக்கும் எனக் குறிப்பிட்டார்.
கதுவா மாவட்டத்தின் மச்செடி-கிண்ட்லி-மல்ஹா் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டிருந்தனா். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் அந்த ராணுவ வாகனங்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினா். பாதுகாப்புப் படையினா் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் அருகில் இருந்த காட்டுக்குள் தப்பி ஓடினா். இந்த மோதலில் 10 ராணுவ வீரா்கள் காயமடைந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 4 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
கடந்த நான்கு வாரத்தில் கதுவா மாவட்டத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.