
அமெரிக்காவில் படிக்கச் சென்ற இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாய் சூர்யா அவினாஷ் கட்டே என்பவர், அமெரிக்காவின் டிரைன் பல்கலைக்கழகத்தில் 2023ஆம் ஆண்டு முதல் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் அல்பானி, பார்பெர்வில் நீர்வீழ்ச்சி அருகில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவினாஷ் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளார்.
நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த அவினாஷ், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, தகவல் அறிந்த அமெரிக்கக் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று அவினாஷின் உடலை மீட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், அவினாஷின் உயிரிழப்பு குறித்து, அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததுடன் இரங்கலும் தெரிவித்தது.
மேலும், அவினாஷின் உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கு `எந்தவித ஆட்சேபனை இல்லை சான்றிதழ்’ வழங்குவது உட்பட தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக, நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.