
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை உத்தரபிரதேச மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
300 பக்க விசாரணை அறிக்கையில் அதன்படி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செய்த தவறே கூட்ட நெரிசல் ஏற்பட முக்கிய காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் பேர் திரண்டிருந்த நிகழ்ச்சிக்கு, 80,000 பேர் மட்டுமே பங்கேற்கப் போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி பெற்றிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்பட, ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என மொத்தம் 119 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்ற ’போலே பாபா’ சாமியாரின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தேவ் பிரகாஷ் மதுக்கர் என்பவர் இம்மாதம் 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணை தொடருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.