
ஏப்ரல் மாதம் உத்தரகாண்ட் மாநில மருந்துகள் உரிமம் வழங்கும் ஆணையத்தால் தயாரிப்புக்கு தடை விதிக்கப்பட்ட 14 பொருள்களின் விற்பனையை நிறுத்தியுள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுமம் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் பதஞ்சலி நிறுமம் தனது 5,606 கிளைகளிலிருந்தும் அந்த பொருள்களை திரும்ப பெற அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளது.
அதே போல அந்த பொருள்களுக்கான விளம்பரங்களை ஒளிபரப்புவதை நிறுத்தவும் ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டதாக பதஞ்சலி தெரிவித்தது.
இந்த வழக்கில் 14 பொருள்களின் விளம்பரத்தை திரும்ப பெற பதஞ்சலி முன்வைத்த கோரிக்கை சமூக ஊடங்களால் ஏற்கப்பட்டதா விளம்பரங்கள் திரும்ப பெறப்பட்டனவா என்பது குறித்த விவரங்களை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அமர்வு கேட்டுக்கொண்டு மேலதிக விசாரணையை ஜூலை 30-க்கு ஒத்திவைத்தது.
ஆயுர்வேத பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி மீது இந்திய மருத்துவ கூட்டமைப்பு தொடர்ந்த தவறான விளம்பரங்களை பதஞ்சலி முன்வைக்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
முன்னதாக உத்தரகாண்ட் மாநில மருந்துகள் உரிமம் வழங்கும் ஆணையம் பதஞ்சலி மற்றும் திவ்யா பார்மஸி நிறுவனங்களின் 14 பொருள்களுக்கு உடனடியான தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.