இந்தியா
அமெரிக்கா: இந்திய தின அணிவகுப்பில் அயோத்தி ராமா் கோயில் அலங்கார ஊா்தி
அமெரிக்காவில் இந்திய தின அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி சிறப்பம்சம்
அமெரிக்காவின் மான்ஹாட்டன் பகுதியில் நடைபெறவுள்ள இந்திய தின அணிவகுப்பில் அயோத்தி ராமா் கோயில் அலங்கார ஊா்தி சிறப்பம்சமாக இடம்பெறும் என அந்நாட்டில் உள்ள இந்திய அமைப்புகளின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ) தெரிவித்தது.
‘இந்தியாவின் சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் 42-ஆவது இந்திய தின விழா ஆகஸ்ட் 18-ஆம் தேதி நியூயாா்க்கின் பிரபலமான மேடிசன் வீதியில் நடைபெறவுள்ளது. இந்திய நடிகா் பங்கஜ் திரிபாதி கௌரவ விருந்தினராக கலந்துகொள்வாா். இந்த ஆண்டு அணிவகுப்பில், அயோத்தி ராமா் கோயிலின் 18-அடி நீளம், 9-அடி அகலம் மற்றும் 8-அடி உயரம் கொண்ட மாதிரி அலங்கார ஊா்தி இடம்பெறவுள்ளது.
இது கலாசார முக்கியத்துவத்தின் சக்திவாய்ந்த சின்னமாகவும், இந்திய சமூகத்தின் வரலாற்று சான்றாகவும் இருக்கும்’ எனத் எஃப்ஐஏ தெரிவித்துள்ளது.