இல்திஜா முப்தி
இல்திஜா முப்திஐஏஎன்எஸ்

அலைபேசி ஹேக் செய்யப்பட்டதா? மெகபூபா முப்தியின் மகள் குற்றச்சாட்டு!

உளவு செயலியால் இல்திஜா முப்தியின் மொபைல் ஹேக் செய்யப்பட்டதாக புகார்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தியின் மொபைல் போன் பெகாசஸ் ஸ்பைவேரால் ஹேக் செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் இல்திஜா முப்தி வெளியிட்டுள்ள பதிவில், விமர்சகர்கள் மற்றும் எதிர்க்கட்சி நபர்களை துன்புறுத்த அரசால் நியமிக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேரினால் தனது போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிள் எச்சரிக்கை அனுப்பியதைக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவை குற்றம்சாட்டியுள்ள அவர், கட்சிக்கு எதிராக உள்ள பெண் தலைவர்களை உளவு பார்ப்பதாக கூறியுள்ளார். இதைவிட தாழ்ந்து நடந்துகொள்ள முடியாது எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஒட்டுக்கேட்பது, தகவல்களை சேகரிப்பது உள்ளிட்டவற்றுக்காக இஸ்ரேலின் இணைய உளவு அமைப்பான என்எஸ்ஓவால் உருவாக்கப்பட்டதுதான் பெகாசஸ் ஸ்பைவேர்.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் மெகபூபாவுக்காக களத்தில் முன்நின்று பிரசாரம் மேற்கொண்ட இல்திஜா முப்தி தீவிரமாக அரசியலில் பங்கெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com