குழந்தை திருமணங்கள்
குழந்தை திருமணங்கள்

அதிகரித்து வரும் குழந்தை திருமணங்கள்: எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு: மனுவின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவது குறித்தும், அதைத் தடுப்பதற்கான சட்ட நடைமுறைகள் முறையாக அமல்படுத்தாதது குறித்தம் புகாா் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.

‘அறிவொளி மற்றும் தன்னாா்வ நடவடிக்கைகளுக்கான சமூகம்’ என்ற அரசு சாரா தன்னாா்வ அமைப்பு சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் மனோஜ் மிஸ்ராவும், அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வரியா பாட்டியும் ஆஜராகி இறுதி வாதங்களை முன்வைத்தனா். நாட்டில் குழந்தைகள் திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com