
கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு எதிரான கேஜரிவாலின் மனுவை செப்டம்பர் 9-ல் விசாரணை நடத்தப்படும் என்று தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமலாக்கத் துறை சமர்ப்பித்த பதிலுக்கு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி தலைவருக்கு நீதிபதி பிரதீபா எம் சிங் தலைமையிலான பெஞ்ச் மேலும் நான்கு வாரக் கால அவகாசம் அளித்துள்ளது.
கேஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், சூழ்நிலையில் சில மாற்றங்கள் இருப்பதாவும், தங்களுக்கு முறையான சட்டப்பூர்வ நேர்காணல் வழங்கப்படவில்லை என்றும் அதற்கான மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் கூறி மறுஆய்வு மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார்.
மறுஆய்வு மனுவை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அமித் சர்மா அடங்கிய அமர்வு கூறியுள்ளது.
பணமோசடி வழக்கில் கேஜரிவால் கடந்த மார்ச் 21 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக கேஜரிவால் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 2-ம் தேதி மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின்னர், ஜூன் 20ல் விசாரணை நீதிமன்றம் பணமோசடி வழக்கில் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது, ஆனால் ஜூன் 25ல் அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தில்லி நீதிமன்றம் ஜாமீன் உத்தரவை நிறுத்திவைத்தது. இதையடுத்து ஜூன் 26ல் கலால் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் தில்லி முதல்வரை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்தது.
இந்த நிலையில், அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு எதிரான கேஜரிவாலின் மனுவை செப்டம்பர் 9-ல் விசாரணை நடத்தப்படும் என்று தில்லி உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.