10 பணியிடங்களுக்காகக் குவிந்த 1000 பட்டதாரிகள்!

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவு செய்கின்றனர்
வேலைக்காகத் திண்டாட்டம்!
வேலைக்காகத் திண்டாட்டம்!dot com
Published on
Updated on
1 min read

தனியார் நிறுவனத்தின் நேர்காணலில் ஒரே நேரத்தில் குவிந்த பட்டதாரிகளால் கூட்டநெரிசலில் ஏற்பட்டது.

குஜராத்தின் பரூச் நகரில், ஒரு தனியார் நிறுவனம் காலிப்பணி இடங்களுக்காக நேர்காணல் நடத்தியது. இந்த நேர்காணல் கெமிகல் இன்ஜினியரிங், மேற்பார்வையாளர் மற்றும் நிர்வாக அதிகாரி உள்பட சுமார் 10 பணியிடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டது.

ஆனால், இதற்காக ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நேர்காணலில், ஒரே நேரத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஹோட்டலின் முன்னிருந்த தடுப்புக்கம்பி உடைந்து விழுந்ததில் கலந்துகொள்ள வந்த இளைஞர்கள் தவறி கீழே விழுந்தனர்.

இதில் இளைஞர் ஒருவர் காயமடைந்ததுடன், அருகேயிருந்த வாகனங்களும் சேதமடைந்தன.

இந்த சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com