
உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்க்கும் இன்று(ஜூலை 12) திருமணம் நடைபெறுகிறது.
மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இத்திருமண விழாவில் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள முக்கிய தலைவர்களும் பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளெய்ர் தனது மனைவியுடன் மும்பையிலுள்ள ஜியோ உலக மையத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
இத்திருமண விழாவில் இந்திய திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான் கன், ஷாருக் கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா அத்வானி, சன்னி தியோல் என பெருந்திரளாக பல தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.