புதிய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி: யார் இவர்?

கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலின்போது சீனாவுக்கான இந்திய தூதராக செயல்பட்டவர்.
விக்ரம் மிஸ்ரி
விக்ரம் மிஸ்ரி
Published on
Updated on
1 min read

மத்திய வெளியுறவுத் துறையின் புதிய செயலாளராக விக்ரம் மிஸ்ரி பதவியேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்து விக்ரம் மிஸ்ரி வாழ்த்து பெற்றுக் கொண்டார்.

வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த வினய் மோகனின் குவாத்ரா, கடந்த மார்ச் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில், ஜூலை 14 வரை பதவி நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று வினய் மோகன் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, 1989-ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவு அதிகாரியான விக்ரம் மிஸ்ரி புதிய செயலாளராக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

விக்ரம் மிஸ்ரி யார்?

1989-ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவு அதிகாரியான விக்ரம் மிஸ்ரி தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

அதற்கு முன்னதாக சீனாவுக்கான இந்திய தூதராக 2019 முதல் 2021 வரை பணியாற்றியுள்ளார். 2020 கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலின் போது பெரும் பதற்றம் ஏற்பட்டபோது இந்தியா - சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் மிஸ்ரி முக்கிய பங்காற்றினார்.

ஸ்பெயினுக்கான இந்திய தூதராக 2014 - 2016 வரையும், மியான்மருக்கான இந்திய தூதராக 2016 - 2018 வரையும் பணியாற்றியுள்ளார்.

ரஷிய - உக்ரைன் போர், ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் வடக்கு அமெரிக்காவில் இந்தியாவின் முக்கிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மத்திய வெளியுறவுத் துறையின் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்திர குமார் குஜ்ரால், மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி ஆகிய மூன்று பிரதமர்களின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய தனிப் பெருமை உடையவர்.

மேலும், ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர தூதராக விரைவில் மிஸ்ரியை மத்திய அரசு நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com