
கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் அவற்றின் உரிமையாளர்களின் பெயரை வெளியிட வேண்டும் என்ற முசாபர்நகர் காவல்துறையின் உத்தரவு சமூகக் குற்றம் என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
முசாஃபர்நகரில் உள்ள காவல்துறை, கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்ளிலும் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது. இது முஸ்லீம் வர்த்தகர்களைக் குறிவைத்ததாக எதிர்க்கட்சிகளால் பார்க்கப்பட்டது.
இதுதொடர்பாக அவர் எக்ஸில் வெளியிட்ட பதிவில்,
உரிமையாளர்களின் பெயர் குட்டு, முன்னா, சோட்டு என்றால் என்ன செய்வது? இந்த பெயர்களில் இருந்து நீங்கள் என்ன கண்டுபிடிக்க முடியும்? நீதிமன்றம் இந்த விஷயத்தைத் தானாக முன்வந்து, அரசின் நோக்கங்களை விசாரித்து தகுந்த தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கூறியுள்ளார்.
மேலும் இந்த உத்தரவு அமைதியான சூழலையும், நல்லிணக்கத்தையும் கெடுக்கும் நோக்கில் உள்ளதாகவும், இது ஒரு சமூக குற்றம் என்றும் அவர் கூறினார்.
முசாபர்நகர் காவல்துறைத் தலைவர் அபிஷேக் சிங் கூறுகையில், கன்வார் யாத்திரை பாதையில் சுமார் 240 கி.மீ வழித்தடத்தில் உள்ள உணவகங்கள், தாபாக்கள் மற்றும் வண்டிகள் உள்பட அனைத்து உணவகங்களும் அவற்றின் உரிமையாளர்கள் கடையில் பணிபுரிபவர்களின் பெயர்களைக் காண்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
"கன்வாரியாக்களிடையே குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதை அனைவரும் தானாக முன்வந்து பின்பற்றுகிறார்கள், என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த முடிவு அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களிடமிருந்து வெகுண்டெழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.