
பெங்களூருவில் உள்ள ஜிடி வேர்ல்ட் வணிக வளாகத்தில் வேட்டி அணிந்து சென்ற முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் வணிக வளாகத்தை ஒரு வாரத்துக்கு மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் சுரேஷ், சட்டப்படி, வணிகவளாகத்தை ஏழு நாள்களுக்கு மூடலாம். புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே அதிகாரிகளிடம் இதுபற்றி பேசினேன். வேட்டி அணிந்துவந்த விவகாரத்தால் வணிகவளாகம் ஏழு நாட்களுக்கு மூடப்படும். அமைச்சர் சுரேஷின் அறிவிப்பைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் யு.டி.காதர் இந்த முடிவை ஆதரித்து, உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தினார்.
முன்னதாக, பெங்களூருவில் உள்ள ஜிடி வேர்ல்ட் வணிக வளாகத்தில் வேட்டி அணிந்து சென்ற முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஜிடி வேர்ல்ட் வணிக வளாகத்தில் திரைப்படம் பார்ப்பதற்கு 70 வயதான விவசாயி ஃபக்கீரப்பா தனது மகன் நாகராஜுடன் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு நேற்றுமுன்தினம் (ஜூலை 16) சென்றுள்ளார். ஆனால், ஃபக்கீரப்பா வேட்டி அணிந்து சென்றதால், மாலின் பாதுகாப்புக் காவலர்கள் அவர்களை வணிக வளாகத்தினுள்ளே அனுமதிக்கவில்லை.
இதைக்கண்டித்து ஜிடி வேர்ல்ட் வணிகவளாக நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அப்பகுதி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகையும் மாடலுமான கௌஹர் கான் இன்ஸ்டாகிராமில் இந்த சம்பவத்தை கண்டித்து, “இது முற்றிலும் வெட்கக்கேடானது. மால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இந்தியா, நாம் அனைவரும் நமது கலாசாரத்தைப் பற்றி பெருமைப்பட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.