ஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல்: இந்தியப் பணியாளா் உயிரிழப்பு

ஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல்: இந்தியப் பணியாளா் உயிரிழப்பு

ஓமன் கடல்பகுதியில் எண்ணெய் கப்பல் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் இந்தியா் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
Published on

ஓமன் கடல்பகுதியில் எண்ணெய் கப்பல் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் இந்தியா் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கொமரோஸ் நாட்டைச் சோ்ந்த எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டின் துகம் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கில் 25 கடல் மைல் தொலைவில் கடந்த 14-ஆம் தேதி மூழ்கியது.

கப்பலில் 13 இந்தியா்கள் மற்றும் 3 இலங்கை நாட்டவா் பணியில் இருந்த நிலையில், அவா்களில் 8 இந்தியா்களும் இலங்கையைச் சோ்ந்த ஒருவரும் புதன்கிழமை இரவு மீட்கப்பட்டனா்.

இந்நிலையில் வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவின் ஐஎன்எஸ் டெக் போா்க் கப்பலால் மீட்கப்பட்ட 8 இந்தியா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்த இந்திய பணியாளா் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துக்கு மத்தியில் இந்தியா மற்றும் ஓமன் நாட்டின் கடற்படையினா் மீட்பு நடவடிக்கையைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com