மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியாகினர்.
மின்னல்
மின்னல் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ”அசோக் நகர் மாவட்டத்தின் சடோரா பகுதியில் உள்ள பங்கரியா-சக் கிராமத்தில் வியாழக்கிழமை மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் 3 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்னல்
உலகளவில் முடங்கிய மைக்ரோசாப்ட் மென்பொருள்: விமான சேவைகள் பாதிப்பு!

இதேபோல், சத்தர்பூரில், காடிமல்ஹ்ரா பகுதிகளில் உள்ள பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3-ஆம் வகுப்பு மாணவர் ரவீந்தர் ரைக்வார் மின்னல் தாக்கி உயிரிழந்தார். மகராஜ்பூர் பகுதியில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் பலியானார்.

குவாலியரில் உள்ள பிதர்வார் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் மற்றும் ஆண் உயிரிழந்தனர். மேலும் பன்னாவின் அஜய்கர் பகுதியில் 40 வயதான விவசாயி பலியானார். அங்கு வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று ஆடுகளும் மின்னல் தாக்கியதில் இறந்தன” என்றனர்.

மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் போபால் முன்னறிவிப்புப் பொறுப்பாளர் திவ்யா சுரேந்திரன் கூறுகையில், “அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

மின்னல்
இத்தாலிய பிரதமரை கேலி செய்தவருக்கு அபராதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com