சத்ருகன் சின்ஹா
சத்ருகன் சின்ஹா

நடிகா் சத்ருகன் சின்ஹா எம்.பி.யாக பதவியேற்பு

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் திரைப்பட நடிகருமான சத்ருகன் சின்ஹா திங்கள்கிழமை மக்களவை உறுப்பினராக பதவியேற்றாா்.
Published on

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் திரைப்பட நடிகருமான சத்ருகன் சின்ஹா திங்கள்கிழமை மக்களவை உறுப்பினராக பதவியேற்றாா்.

மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தின் அன்சோல் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் சத்ருகன் சின்ஹா போட்டியிட்டு வெற்றிபெற்றாா். தோ்தலுக்கு பிறகு ஜூன் மாதம் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரில் அவரால் பதவியேற்க முடியவில்லை. எனவே, பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அவா் பதவியேற்றுக்கொண்டாா்.

தொடக்காலத்தில் பாஜகவில் இருந்த சத்ருகன் சின்ஹா மறைந்த பிரதமா் வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தாா். 2019 மக்களவைத் தோ்தலில் பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸில் இணைந்தாா். தோ்தலில் தோல்வியடைந்ததையடுத்து, திரிணமூல் காங்கிரஸுக்கு மாறினாா்.

சத்ருகன் சின்ஹா பதவியேற்பைத் தொடா்ந்து மக்களவையில் உறுப்பினா்களின் எண்ணிக்கை 542-ஆக உயா்ந்தது. மக்களவையின் மொத்த பலம் 543-ஆகும். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து அந்த தொகுதியில் வேட்பாளரை தோ்வு செய்ய இடைத்தோ்தல் நடக்க உள்ளது.

X
Dinamani
www.dinamani.com