
இந்துக்களின் புனித மாதம் என்று அழைக்கப்படும் சாவன் மாதத்தின் முதல் திங்கள்கிழமையான இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சாவன் என்றழைக்கப்படும் ஆடி மாதம் வடமாநிலங்களில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் காசி விஸ்வநாதர் கோயிலில் சாவன் மாதத்தின் முதல் திங்கள்கிழமையில் ஜலபிஷேகம் முக்கியமானது. கங்கையிலிருந்து புனித நீரெடுத்து, நடதேவந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோயிலில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர் பக்தர்கள்.
தொலைதூரத்திலிருந்தும் மக்கள் வாரணாசிக்கு வந்து ஜலபிஷேகம் செய்து தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பிராத்திக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பு எற்பாடுகளைச் செய்துள்ளனர். பக்தர்களை வரவேற்கும் வகையில் கோயில் நுழைவுவாயில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் அதிகமான இருப்பதால், வரிசையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கடும் வெயில் மற்றும் புழுக்கத்தைக் கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காகத் தண்ணீர் மற்றும் ஆங்காங்கே மின்விசிறிகள் வசதியும் வழங்கியுள்ளது.
மேலும், பக்தர்கள் தரிசனத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பதற்காக விவிஐபி தரிசனம் உள்ளிட்டவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழிபாடுகளில் பங்கேற்க இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சிவபெருமானைத் தரிசித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.