வளர்ந்த இந்தியா என்ற இலக்கில், கூடுதல் வளர்ச்சிக்கான இடங்களை பொருளாதார ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது, பொருளாதார பலம் மற்றும் நமது அரசு கொண்டுவந்த பல்வேறு சீர்திருத்தங்களின் விளைவுகள் போன்றவற்றை பொருளாதார ஆய்வறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
மேலும் இந்த அறிக்கையானது, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய நம் பயணத்தில் கூடுதல் வளர்ச்சிக்கான இடங்களையும் செயல்பாடுகளையும் கண்டறிந்துள்ளது என மோடி பதிவிட்டுள்ளார்.
மக்களவையில் பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 22) தாக்கல் செய்தார்.
நாட்டின் முக்கியப் பொருளாதார அளவீடுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் பொருளாதார அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை (ஜூலை 23) தாக்கல் செய்யவுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்தார்.