தீ விபத்தால் சாய்ந்தது பிரம்மபுத்திரா கப்பல்! மாலுமியைத் தேடும் பணி தீவிரம்

கப்பற்படை தளத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தீ விபத்து.
சாயந்த நிலையில் பிரம்மபுத்திரா கப்பல்
சாயந்த நிலையில் பிரம்மபுத்திரா கப்பல்
Published on
Updated on
1 min read

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா கப்பலில் ஏற்பட்ட தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட நிலையில், தீக்கிரையானதால் கப்பல் ஒருபுறம் சாய்ந்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா கப்பலில் நேற்று இரவு (ஜூலை 21) தீ விபத்து நேரிட்டது.

கப்பற்படை தளத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மும்பையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த விபத்தில், போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காணாமல் போன மாலுமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கப்பற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான பிரம்மபுத்திரா கப்பலில், நேற்று (ஜூலை 21) மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாலை தீ விபத்து நேரிட்டது. இன்று காலை, மும்பை கடற்படை கப்பல் துறை மற்றும் துறைமுகத்தில் உள்ள மற்ற கப்பல்களின் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கப்பலின் பணியாளர்களால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில், போர்க்கப்பல் ஒரு பக்கம் (துறைமுகம்) கடுமையாக சேதமடைந்து சாய்ந்துள்ளது. கப்பலை நேர்மையான நிலைக்கு கொண்டு வர முடியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதன்மையான போர்க்கப்பல். ஏப்ரல் 2000-ஆம் ஆண்டு் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.


இக்கப்பல், 5,300 டன் எடை கொண்டது. 125 மீட்டர் நீளமும், 14.4 மீட்டர் அகலமும் உடையது. கடலில் 27 நாட்டிக்கல் வேகத்தில் செல்லக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com