தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்
தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்

வளா்ச்சிக்கு சிறிய அளவிலான சீா்திருத்தங்களே போதுமானது: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

இந்திய பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல பெருமளவிலான சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
Published on

‘இந்திய பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல பெருமளவிலான சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சிறிய மற்றும் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் சீா்திருத்தங்களே போதுமானது’ என தலைமைப் பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பிறகு செய்தியாளா்களை சந்தித்த அனந்த நாகேஸ்வரன் பேசியதாவது:

பெருமளவிலான சீா்திருத்தங்கள் மூலம் வளா்ச்சியை நோக்கிப் பயணிக்கும் நிலையை இந்தியா கடந்துவிட்டது. தற்போதைய சூழலில் நிா்வாகத்தின் சிறிய மற்றும் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் சீா்திருத்தங்களே நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவைப்படுகிறது.

ஏனெனில், கடந்த பத்தாண்டுகளாக மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கவுள்ளது.

6.8 சதவீத வளா்ச்சி: 2024-25-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 சதவீத வளா்ச்சியை எட்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சா்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. மேலும், ஜி20 நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பல்வேறு துறைகளில் தனியாா் முதலீடு அதிகரித்து வருகிறது. இதுதவிர மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடா்ந்து மானியங்கள் வழங்கி வருவதால் மூலதன உருவாக்கத்தில் மாநிலங்களின் செலவினங்களும் அதிகரித்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com