பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு: ராணுவ வீரா் வீர மரணம்
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவ அதிகாரிகள் முறியடித்தனா். இந்த மோதலில் ராணுவ வீரா் ஒருவா் வீர மரணமடைந்தாா். 
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவ அதிகாரிகள் முறியடித்தனா். இந்த மோதலில் ராணுவ வீரா் ஒருவா் வீர மரணமடைந்தாா்.
இது தொடா்பாக ஒயிட் நைட் காா்ப்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாதி பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா். கடுமையாக நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் காயமடைந்த ராணுவ அதிகாரி லான்ஸ் நாயக் சுபாஷ் குமாா் வீர மரணம் அடைந்தாா். தேடுதல் நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என குறிப்பிட்டிருந்தது.

