
2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களுக்கு சுங்கவரியை 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து, மொபைல் போன்கள் சார்ஜர்கள் மீதான சுங்கவரி 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
இதனால், மொபைல் போன்களின் விலையானது குறையும் எதிர்பார்க்கப்படுகிறது.
விலைகுறையும் பொருள்கள்
தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மொபைல்ஃபோன், சார்ஜர், சூரிய மின் உபகரண பாகங்கள், உயிர்காக்கும் மருந்துகளில் புற்றுநோய் மருந்துகள், கடல் உணவு வகைகள் மற்றும் தோல் பொருள்கள், விண்வெளி பாதுகாப்புத் துறையில் முக்கியமான கனிமங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பெரோநிக்கல், ப்ளிஸ்டர், தாமிரம் ஆகிய கனிமங்களுக்கு சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோல் பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இறால் மற்றும் மீன் தீவனத்திற்கான சுங்க வரி 5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
1. மொபைல், சார்ஜர் மீதான வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
2. தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6% ஆகவும், பிளாட்டினம் 6.4% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
3. மூன்று புற்றுநோய் சிகிச்சை மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
4. ஃபெரோநிக்கல் மற்றும் ப்ளிஸ்டர் காப்பர் மீதான அடிப்படை சுங்கவரியை அரசு நீக்குகிறது.
5. எஃப்எம் சோலார் பேனல்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் விலக்கு அளிக்கப்பட்ட மூலதனப் பொருள்களின் பட்டியலை விரிவாக்க முன்மொழிந்தது.
6. 25 முக்கியமான கனிமங்கள் மீதான தனிப்பயன் வரிகளை முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
7. இறால் மற்றும் மீன் தீவனத்தின் மீதான சுங்க வரியை 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
8. தோல் பொருள்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
9. மருத்துவம், அறுவை சிகிச்சை, பல் அல்லது கால்நடை மருத்துவப் பொருட்களுக்கான எக்ஸ்ரே இயந்திரங்கள்.
விலை உயரும் பொருள்கள்:
அமோனியம் நைட்ரேட், மீதான சுங்கவரியானது 10 % லிருந்து 25 சதவீதமாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் 25%, சில தொலைத்தொடர்பு உபகரணங்கள், 10% லிருந்து 15% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1. குறிப்பிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களின் மீதான அடிப்படை சுங்க வரியை 10% இல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது.
2. பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.
3. அமோனியம் நைட்ரேட்டின் மீதான சுங்க வரி 7.5% லிருந்து 10% ஆக அதிகரித்துள்ளது.
4. இறக்குமதி செய்யப்பட்ட குடைகள்.
5. ஆய்வக ரசாயனங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.