ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.
ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.

ரயில்வே திட்டங்களுக்கு கேரள அரசு ஒத்துழைப்பதில்லை- மக்களவையில் அமைச்சா் பதில்

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு கேரள மாநில அரசு போதிய ஒத்துழைப்பு தருவதில்லை என்று மக்களவையில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தாா்.
Published on

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு கேரள மாநில அரசு போதிய ஒத்துழைப்பு தருவதில்லை என்று மக்களவையில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தாா்.

மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது 1997-98-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அங்கமாலி-சபரிமலை ரயில் திட்டம் தொடா்பாக துணைக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

இந்த ரயில் திட்டம் மிகவும் சிக்கலானது. இதற்கு மாநில அரசின் முழு ஒத்துழைப்பு தேவை. ஒத்துழைப்பு இல்லாமல் இத்திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது. இந்த ரயில்வே திட்டம் 111 கி.மீ தொலைவு உள்ளது.

அதேநேரத்தில் செங்கனூா்-பம்பை இடையே 75 கி.மீ. தொலைவிலான திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது கோயிலில் இருந்து 4 கி.மீ தொலைவிலேயே உள்ளது. எனவே, இத்திட்டம் குறித்து மதிப்பீடும் நடைபெற்று வருகிறது. மதிப்பீடு முடிந்த பிறகு முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்பட்டும்.

கேரளத்தில் ரயில்வே பணிகளுக்கு பொதுமக்களின் ஒரு பகுதியினா் தடையாக உள்ளனா். ஏனெனில், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவா்கள் அஞ்சுகின்றனா். நிலம் கையகப்படுத்துவதற்கு கேரள அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இங்குள்ள கேரள எம்.பி.க்கள் அனைவருமே தங்கள் பகுதியில் உள்ள மக்களைச் சந்தித்து ரயில் திட்டங்குக்கு நிலம் ஒதுக்கக் கோரி பிரசாரம் செய்ய வேண்டும்.

சபரிமலை ரயில் ரயில்வே திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை ஆண்டுதோறும் அரசு அதிகரித்துதான் வருகிறது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com