கர்நாடக பேரவையிலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்!

தமிழகம், மேற்கு வங்கத்தை தொடர்ந்து கர்நாடகத்தில் தீர்மானம்..
கர்நாடக பேரவை
கர்நாடக பேரவைShailendra Bhojak
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநில சட்டப்பேரவையிலும் நீட் தேர்வுக்கு எதிராக வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராகவும், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு ஆகிய தீர்மானங்களும் கர்நாடக பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டை தொடர்ந்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதன்கிழமை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

கர்நாடக அமைச்சரவையில் நீட் தேர்வுக்கு எதிராக ஏற்கெனவே தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் மாநில மருத்துவக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் இன்று தீர்மானம் கொண்டு வந்தார்.

நீட் தேர்வு முறையை ரத்து செய்து பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள தீர்மானம் கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக பேரவை
நீதி ஆயோக்: மம்தாவை தவிர இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிப்பு!

கர்நாடக சட்டப்பேரவையில் முடா ஊழலை விவாதிக்க கோரியும், முதல்வர் சித்தரமையா பதவி விலக வேண்டும் என்றும் நேற்று முதல் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று இரண்டாவது நாளாக பாஜக எம்எல்ஏக்களின் போராட்டம் தொடர்ந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com