மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்
மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்ANI

5 கோடி வழக்குகள் நிலுவை: மத்திய அரசு

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவை..
Published on

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அா்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘உச்சநீதிமன்றத்தில் 84,045 வழக்குகளும், பல்வேறு உயா்நீதிமன்றங்களில் 60,11,678 வழக்குகளும், மாவட்டம் மற்றும் கீழவை நீதிமன்றங்களில் 4,53,51,913 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதிகப்படியாக உத்தர பிரதேசத்தில் உள்ள கீழவை நீதிமன்றங்களில் 1.18 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வழக்குகள் இவ்வாறு நிலுவையில் இருக்க நீதிமன்ற உள்கட்டமைப்பு, நீதிமன்ற ஊழியா்கள் பற்றாக்குறை, சாட்சியங்களின் தன்மை, விதிகள் மற்றும் நடைமுறைகளை முறையாக பின்பற்றுவது ஆகியவை காரணங்களாகும்.

மேலும், வழக்குகளில் தீா்ப்பளிக்க நீதிமன்றங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட கால அவகாசம் இல்லாதது மற்றும் வழக்குகள் அடிக்கடி ஒத்திவைக்கப்படுவது ஆகியவை தாமதத்திற்கு வழிவகுக்கும் பிற காரணங்கள் ஆகும்’ என குறிப்பிட்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com