
பாஜவின் ஆட்சியில் தான் அனைத்து ஊழல்களும் நடந்துள்ளதாகவும் கார்நடாகத்தின் துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து டி.கே. சிவகுமார் செய்தியாளர்களுடன் பேசினார். மைசூர் நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்திற்கு(முடா) போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் சித்தராமையாவின் புகழைக் கெடுக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.
முடா ஊழல் குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதி கோரியும், முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் பாஜக எம்எல்ஏக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முடா ஊழலில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சார்பில் நடைப்பயணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. மோசடிகளின் தலைசிறந்த பாஜகவின் ஆட்சியில்தான் அனைத்து ஊழல்களும் நடைபெற்றுள்ளது. பாஜக தங்களின் சவக்குழியை தாங்களே தோண்டிக் கொள்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் மிகப்பெரிய மாநிலம் கர்நாடகம். எனவே அதை எப்படியும் வீழ்த்த பாஜக முயற்சிக்கின்றது. அவர்கள் விரும்புவதைச் செய்யுங்கள், நாங்கள் அதற்குத் தகுந்த பதிலளிப்போம்.
வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சிக் கழகத்தில் நடந்துள்ள முறைகேடு விவகாரத்தில் மாநில அரசு விசாரித்து வருகிறது. ஆனால் பாஜக தனது சொந்த நிறுவனங்களை ஏவி விசாரணை செய்து தேவையற்ற பிரச்னைகளை உருவாகியுள்ளது. மக்களைக் குறிவைத்து முயற்சிப்பதை விட சட்டப்பூர்வமாகப் போராடட்டும்.
முடா வழக்கை மீண்டும் தூர்வாருவதன் மூலம் அவர்கள் இதுபோன்ற தந்திரத்தை முயற்சிக்கிறார்கள். பாஜகவும், ஜேடிஎஸ்ஸும் மாநிலத்தில் தங்களின் இடத்தை இழக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள். எனவே நடைப்பயணத்தை நடத்தக் கைகோர்த்துள்ளனர். இந்த வழக்கில் அவற்றை நாங்கள் அம்பலப்படுத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.