ஜம்மு-காஷ்மீர்: கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐந்து குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர்.
சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஆம்புலன்ஸ்.
சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஆம்புலன்ஸ்.
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐந்து குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கார் ஒன்று கிஷ்த்வாரில் இருந்து சிந்தன் டாப் வழியாக மர்வாவை நோக்கி சென்றுசொண்டிருந்தது. அப்போது அந்த கார் சாலையிலிருந்து இறங்கி திடீரென டக்சும் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்களின் ஒரு போலீஸ்காரர், இரண்டு பெண்கள் மற்றும் ஆறு முதல் 16 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகள் உள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.