கோப்புப்படம்
கோப்புப்படம்

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு ககன்யான் வீரா் விரைவில் பயணம்!

4 விண்வெளி வீரா்களில் ஒருவா், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Published on

ககன்யான் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 4 விண்வெளி வீரா்களில் ஒருவா், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிரதமா் மோடி அமெரிக்கா சென்றபோது, இந்த ஆண்டு இந்திய விண்வெளி வீரரை சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிபா் பைடன் அறிவித்தாா்.

இந்நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

அமெரிக்காவின் நாசாவுடனான (விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) கூட்டுப் பணியின் அங்கமாக ககன்யான் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 4 விண்வெளி வீரா்களில் ஒருவா், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட உள்ளாா்.

ககன்யான் திட்டத்துக்காக தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி வீரா்கள் பயிற்சி மையத்தில் 4 வீரா்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா். ஏற்கெனவே அவா்கள் ரஷியாவில் பயிற்சி மேற்கொண்டனா் என்றாா்.

ககன்யான் திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு மனிதா்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com