கார்கிலில் குண்டுகள் வெடிக்காத அதிசய பாபா கோயில்!

இங்கு விழுந்த ஒரு வெடிகுண்டுகூட வெடிக்காத அதிசயங்கள் நிறைந்த கார்கில் பாபா கோயில்
கார்கில் பாபா கோயில்
கார்கில் பாபா கோயில்படங்கள் | யூடியூப்
Published on
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கார்கில் போரில் நாம் அடைந்த வரலாற்று வெற்றியை நினைவுகூரும் வகையிலும், போரில் வீரமரணமடைந்த இந்திய வீரா்களுக்கு மரியாதை செலுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி காா்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 1999-ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை, லடாக்கின் காா்கில் மாவட்டத்திலும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலும் இந்தியா பாகிஸ்தான் இடையே போா் நடைபெற்றது. அந்த ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி போரில் இந்தியா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இருபத்து ஐந்தாம் ஆண்டு காா்கில் போா் வெற்றி நாள் ஜூலை 26-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில், கார்கில் போரில் முக்கிய அம்சமாய், இந்த பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு நாதர் பாபா கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது.

1971-ஆம் ஆண்டு தொடங்கி 1999-ஆம் ஆண்டு வரை, கார்கில் போர் உள்ளிட்ட பல சண்டைகளின்போது, இந்த கோயிலின் சுற்றுவட்டாரத்தில் விழுந்த வெடிகுண்டுகளும் பிற வெடி பொருட்களும் இதுவரை வெடித்ததே இல்லை என்ற தகவல் ஆச்சரியப்படுத்துகிறது.

இதையடுத்து கோயிலில் அருள்புரியும் கடவுளின் தெய்வீக சக்தியே இந்த சுற்றுவட்டாரத்தை அனைத்துவித அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பதாக கோயிலையொட்டிய பகுதிகளில் பாதுகாப்புப் பணியிலுள்ள வீரர்கள் பயபக்தியுடன் தெரிவிக்கின்றனர்.

கோயிலின் வரலாறு:

பஞ்சாப் படைப்பிரிவின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கோயில் தற்போது கோயில் அமைந்துள்ள இடத்தின் அருகே, 1970 காலகட்டத்தில் தங்கியிருந்த பாபா என்ற நபர் துறவறம் பூண்டு வாழ்ந்து வந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவரிடம் தெய்வீக சக்தி நிரம்பியிருந்ததால் ஏராளமானோர் இவரிடம் ஆசி பெற்று நல்வாழ்வு வாழ்ந்ததாய் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 1971-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, கார்கிலில் பாபா கோயில் அமைந்துள்ள பகுதியை குறிவைத்து பல தரப்பட்ட தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த தாக்குதல்களில் வீசப்பட்ட குண்டுகள் ஒன்றுகூட வெடிக்கவே இல்லை.

அப்பகுதியில் விழுந்த குண்டுகளை தன் கைகளால் எடுத்து அவற்றை ஓடும் ஆற்று நீரில் விட்டு அங்குள்ள மக்களை மிரள வைத்துள்ளார் பாபா. இதனைத் தொடர்ந்து அவரை போலவே அங்குள்ள மக்களும் அங்கே விழுந்த குண்டுகளை எடுத்து ஓடும் தண்ணீரில் வீசியுள்ளனர். நீரில் சிறிது தூரம் சென்றதும் அந்த வெடிகுண்டுகள் அனைத்தும் ஒவ்வொன்றாய் வெடிக்கத் தொடங்கியுள்ளன என்ற தகவலை ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றனர் ராணுவத்தினர்.

மேலும் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களிடம், இந்த கோயிலில் உள்ள சிவபெருமானை பூஜித்து வழிபட அறிவுறுத்தியுள்ளார் பாபா. அந்த வழக்கப்படியே, இன்றுவரை ராணுவ வீரர்களால் இங்குள்ள சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com