
மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் உள்ள போய் ரயில் நிலையத்தின் அருகே சரக்கு ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடம் புரண்டதால் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. சரக்கு ரயில் மிதமான வேகத்தில் சென்றதால் பாதிப்புகள் எதுவும் இல்லை. சம்பவ இடத்துக்குக்கு வந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் தடம் புரண்டதால் உள்ளூர் ரயில்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.
சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரளும் நிகழ்ச்சி அடிக்கடி நிகழ்வதொன்றாகி வருகின்றது.
இதுதொடர்பாக கிழக்கு ரயில்வேயின் கூற்றுப்படி,
கடந்த ஜூலை 26ல் ஒடிசாவில் புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே அங்குல் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.
ஜூலை 22ல் அல்வார் ரயில் நிலையத்திலிருந்து ரேவாரிக்கு சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மதுராவில் தடம் புரண்டது.
ஜூலை 21ல் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள ரனாகாட் என்ற சரக்கு ரயிலின் பாதுகாப்புப் பெட்டி ஒன்று தடம் புரண்டது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 12வது ரயில் விபத்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.