இடிந்த கட்டடம்
இடிந்த கட்டடம்

நான்கு மாடி குடியிருப்பு இடிந்து விபத்து! 54 பேர் மீட்பு; ஒருவர் பலி, இருவரை காப்பாற்ற முயற்சி

மகாராஷ்டிரத்தில் 10 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்தது
Published on

மகாராஷ்டிரத்தில் நான்கு மாடி அடுக்ககம் இடிந்து விழுந்தது.

மகாராஷ்டிரத்தின் நவி மும்பையில் சிபிடி பெலாப்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி அடுக்ககம் இன்று (ஜூலை 27) அதிகாலை 4.10 மணியளவில் இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்த தீயணைப்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தின் போது, கட்டடத்தில் இருந்த 13 குழந்தைகள் உள்பட 52 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், கட்டட இடிபாடுகளில் 5 பேர் சிக்கியிருப்பது தெரிய வந்தது

அவர்களில் இருவர் மீட்கப்பட்ட போதிலும், மூவரில் ஒருவர் பலியான நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்களுடைய மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோதிலும், அவர்களால் தொடர்பினை ஏற்க இயலவில்லை.

இடிந்த கட்டடம் 10 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. மீட்புப் பணிகள் துரித நிலையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்டிடுவோம் என்று நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஸ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இடிந்த கட்டடம்
நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த நிதீஷ் குமார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com