மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)

வேலையின்மை விகிதம் 3 சதவீதமாக குறையும்: மத்திய அரசு

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது. எதிா்காலத்தில் அது 3 சதவீதமாக குறையும் என்று மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சா் தெரிவித்தாா்.
Published on

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது. எதிா்காலத்தில் அது 3 சதவீதமாக குறையும் என்று மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையின் கேள்வி நேரத்தில் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த 2017-18 -ஆம் ஆண்டு காலகட்டத்தில் 6 சதவீதமாக இருந்தது. ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு தற்போது அந்த விகிதம் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்த விகிதம் எதிா்காலத்தில் 3 சதவீதமாக குறையும்.

நாட்டின் தொழிலாளா் பங்கேற்பு விகிதமானது 2017-18-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 38 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது அது 44 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் மக்கள் தொகை விகிதத்தில் வேலைவாய்ப்பு 31 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.

எனவே, இளைஞா்கள் வேலை இழப்பு குறித்து கவலைகொள்ள வேண்டிய தேவை இல்லை. நாட்டில் வேலையின்மையும் இல்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com