
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குமாரசாமியின் உடல்நிலை நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜக தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது மூக்கில் இருந்து திடீரென ரத்தம் கொட்டியதால் அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின் தற்போது நலமுடன் உள்ளார். தான் சரியாக ஓய்வெடுக்காதபோதும், மன அழுத்தத்திற்குள்ளாகும்போது மூக்கில் ரத்தம் கசிவது சாதாரணமாக ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
கவலைப்பட ஒன்றுமில்லை என்றும், தனது தந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் ஹெச்.டி. குமாரசாமியின் மகன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குமாரசாமியின் உடல்நிலை நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.