வயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணிகளுக்கு விரைந்தது ராணுவம்

வயநாடு நிலச்சரிவுப் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் விரைந்துள்ளது.
Death toll rises to 45 in landslides in Kerala's Wayanad: District officials.
வயநாடு நிலச்சரிவுpti
Published on
Updated on
1 min read

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கனமழை காரணமாக நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் விரைந்துள்ளது.

இந்திய ராணுவத்தின் உதவியை கேரள மாநில அரசு கோரியதையடுத்து, சூரல்மலா பகுதிக்கு ராணுவத்தினர் விரைந்துள்ளனர். மருத்துவ அதிகாரிகள், 40 ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ராணுவ மீட்புக் குழு சூரல்மலா பகுதிக்கு விரைந்துள்ளது.

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள், தற்காலிக நிவாரண முகாம்கள் நிலச்சரிவில் அடித்துச்செல்லப்பட்டதாகவும், இதில் பலர் சிக்கிடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சுமார் 300 குடும்பங்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு நகரப்பகுதியே நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வயநாடு விரைந்துள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பல்வேறு துறை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மீட்பு அவசரகால தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலவச தொலைபேசி எண் - 1077

மாவட்ட அளவில்

1. 04936 204151

2. 9562804151

3. 8078409770

சுல்தான் பாத்தேரி தாலுகா

1. 04936 223355

2. 04936 220296

3. 6238461385

மனந்தவாடி

1. 04935 241111

2. 04935 240231

3. 9446637748

வைத்திரி

1. 04936 256100

கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்று அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்த செய்துள்ளார். மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஐந்து துறை அமைச்சர்களை வயநாட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய கடற்படை வீரர்கள், நிலச்சரிவு நிகழ்ந்தப் பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.

கேரள மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பல ரயில்கள் முழுமையாகவும், சில ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com