
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான நவாப் மாலிக்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்ததில் மகாராஷ்டிர சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தொடர்பு உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அமலாக்கத் துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பேலா எம். திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்வைத்தது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கமான ஜாமீன் மனு நிறைவடையும் வரை மாலிக்கின் மருத்துவ ஜாமீன் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை. அதேசமயம் இடைக்கால மருத்துவ ஜாமீன் நிரந்தரமாக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்கில் மருத்துவ காரணங்களுக்காக தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மாலிக் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.