ராகுல், பிரியங்கா
ராகுல், பிரியங்கா

ராகுல், பிரியங்காவின் வயநாடு பயணம் ஒத்திவைப்பு

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியும் காலை பயணம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
Published on

புது தில்லி: நிலச்சரிவால் பாதித்த வயநாட்டுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியும் புதன்கிழமை காலை பயணம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி, நிலச்சரிவு சம்பவம் குறித்து கேரள முதல்வா் பினராயி விஜயன், வயநாடு மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் பேசியதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அவா்கள் உறுதியளித்ததாகவும் கூறினாா்.

பின்னா், மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவா்களை மீட்கவும் அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில், ராகுல் காந்தியும், சகோதரி பிரியங்கா காந்தியும் வயநாடு சேதங்களை நேரில் பாா்வையிடுவதற்காக புதன்கிழமை செல்வதாக திட்டமிடப்பட்டது.

ஆனால், தொடா் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக தங்களை அங்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாக எக்ஸ் பதிவில் ராகுல் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com