மீட்புப் படையினரை தவிர வயநாட்டுக்கு யாரும் வரவேண்டாம்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் வியாழக்கிழமை அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு.
Wayanad
பினராயி விஜயன்PTI
Published on
Updated on
1 min read

வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் குழுவினருடன் அவசர ஆலோசனையில் புதன்கிழமை காலை முதல்வர் பினராயி விஜயன் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசியல் கட்சிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Wayanad
நிலச்சரிவில் ஒரு ஊரையே காணவில்லை; ஆற்றின் பாதையே மாறியது: மக்கள் கண்ணீர்

மேலும், நிவாரண உதவிகளை அளிக்க அழைப்பு விடுத்துள்ள முதல்வர் பினராயி விஜயன், வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர வேறு யாரும் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் மற்றவர்கள் சூழ்நிலை காரணமாக தடுத்து நிறுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வயநாடு மாவட்டம் முண்டக்கை, மேம்பாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 163 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், 200-க்கும் அதிகமானோர் மண்ணுக்கு அடியில் சிக்கியிருப்பதால் ராணுவம், விமானப் படை, கடற்படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்பு வீரர்கள், காவலர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com