
சத்தீஸ்கரின் பத்தாவது ஆளுநராக ராமன் டேக்கா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ராமன் டேக்காவுக்கு சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத் தலைவர் ரமேஷ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
விழாவையொட்டி செய்தியாளர்களுடன் பேசிய அவர், சத்தீஸ்கர் ஆளுநராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன்.
அஸ்ஸாம் (அவரது சொந்த மாநிலம்) மற்றும் சத்தீஸ்கர் இடையே நீண்ட உறவு உள்ளது. அது மேலும் வளரும், இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
சத்தீஸ்கரின் புவிசார் அரசியல் நிலைமை முதலில் புரிந்துகொள்ள முயற்சிப்பேன். பின்னர் எனது கருத்துகளை வெளிப்படுத்துவேன் என்று அவர் கூறினார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஷ்ணு தியோ சாய், சட்டப்பேரவை தலைவர் ராமன் சிங், மாநில அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அஸ்ஸாமைச் சேர்ந்த 70 வயதான டேக்கா இரண்டு முறை (2009, 2014) நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் பாஜகவின் அஸ்ஸாம் மாநிலப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார். அவர் பாஜகவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.