
குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடும்பத்துடன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
12 ஜோதிர்லிங்களில் ஒன்றான சோமநாதர் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் அறங்காவலர்களில் அமித் ஷாவும் ஒருவர். இந்த நிலையில், அமித் ஷா அவரது மனைவி சோனல்பென் மற்றும் மகன் ஜெய் ஷா ஆகியோர் நேற்று மாலை சோமநாதர் கோயிலுக்கு வந்து "திவாஜ்" பூஜையில் கலந்துகொண்டார்.
நேற்றிரவு சர்க்யூட் ஹவுஸில் தங்கிய அமித் ஷா, அகமதாபாத் செல்வதற்கு முன் சனிக்கிழமை காலை மீண்டும் சோமநாதரை தரிசனம் செய்தார்.
சோமநாதர் கோயிலுக்கு வருவதற்கு முன், ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர், விளையாட்டு தீடலை ஆய்வு செய்து தீ விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக, நேற்று புதுக்கோட்டை பைரவர் கோயிலிலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்காக பிரார்த்தனை செய்யும் வகையில், குடும்பத்தினருக்கு கோயில் கோயிலாக வலம்வருகிறார் அமித் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.