ம.பி.யில் ஜூன் 15-க்குள் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு முன்னதாகவே தொடங்கும் என ஐஎம்டி கணித்துள்ளது.
ம.பி.யில் ஜூன் 15-க்குள் தென்மேற்குப் பருவமழை!
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில் தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ஜூன் 15-க்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

கேரளம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை கடந்த 30-ம் தேதி தொடங்கியுள்ளது. கேரளம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஒரே நேரத்தில் பருவமழை தொடங்குவது மிகவும் அரிதானது. இதற்கு முன்பு 2017, 1997, 1995 மற்றும் 1991ல் இவ்வாறு நடந்துள்ளது.

ம.பி.யில் ஜூன் 15-க்குள் தென்மேற்குப் பருவமழை!
இறுதிக்கட்ட தேர்தல்: 11 மணி நிலவரப்படி 26.3% வாக்குப்பதிவு!

போபால் மையத்தின் ஆய்வாளர் பிரமேந்திர குமார் கூறுகையில்,

மத்தியப் பிரதேசத்தில் பருவமழை ஜூன் 15-க்குள் தொடங்கும். இந்தப் பருவத்தில் மாநிலத்தில் இயல்பை விட அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் சராசரி மழையளவு 949 மிமீ ஆகும். கடந்தாண்டு ஜூன் 25-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com