தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில், கேரளத்தில் எந்தக் கூட்டணி அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றப்போகிறது என்பது குறித்து வெளியான கருத்துக் கணிப்புகள்.
அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 18
ஐக்கிய ஜனநாயக முன்னணி 15 - 18 தொகுதிகளில், இடதுசாரி ஜனநாயக முன்னணி 2 - 5 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 - 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி நியூஸ்-சி
ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 - 19 தொகுதிகளில், இடதுசாரி ஜனநாயக முன்னணி 0 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 - 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே-ஆக்ஸிஸ் மை இந்தியா
ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 - 18 தொகுதிகளில், இடதுசாரி ஜனநாயக முன்னணி 0 - 1 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 - 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டிவி
ஐக்கிய ஜனநாயக முன்னணி 13 - 15 தொகுதிகளில், இடதுசாரி ஜனநாயக முன்னணி 3 - 5 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 - 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை, சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு வெளியிடலாம் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், செய்தி ஊடகங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக தோ்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுக்கும் கடந்த ஏப். 19-இல் தோ்தல் தொடங்கி இன்றுடன் நாட்டின் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. ஏழாவது கட்டமாக 57 தொகுதிகளுக்கு இன்று இறுதிக்கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று மாலை 6 மணியுடன் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன.
தொடர்ந்து, வாக்குப் பதிவுப் பிந்தைய கருத்துகளை கணிப்புகளை அச்சு, காட்சி ஊடகங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் வெளியிட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.