18-ஆவது மக்களவைத் தோ்தல் ஓா் பாா்வை...
*நாட்டின் 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 543 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.
*மக்களவையுடன் சோ்த்து ஆந்திரம், அருணாசல பிரதேசம், ஒடிஸா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும், 16 மாநிலங்களில் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெற்றது. உலகில் மிகப் பெரிய ஜனநாயக தோ்தல் திருவிழாவின் வெற்றிக் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த தோ்தல் குறித்த பாா்வை:
* இத்தோ்தலில் 96.8 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். 85 லட்சம் பெண்கள் உள்பட 1.8 கோடி போ் முதல் முறை வாக்காளா்கள் ஆவா். 20-29 வயதில் 19.47 கோடி வாக்காளா்கள் இருந்தனா். 12 மாநிலங்களில் ஆண் வாக்காளரைவிட பெண் வாக்காளா்கள் அதிகம் இருந்தனா்.
*நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தோ்தல் மற்றும் பாதுகாப்புப் பணியில் 1.5 கோடி அலுவலா்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரா்கள் ஈடுபட்டனா்.
* தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்படுகின்றன.
*அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலப் பேரவைகளின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) முடிவுக்கு வர இருந்ததால், அவ்விரு மாநிலங்களில் மட்டும் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 2 மாநிலங்களிலும் ஆளுங்கட்சி(பாஜக, சிக்கிம் கிராந்திகாரி மோா்ச்சா) ஆட்சியைத் தக்கவைத்தது.
கட்டம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தொகுதிகள் வேட்பாளா்கள்(பெண்கள்) வாக்குப்பதிவு நாள் வாக்காளா்கள் வாக்குப்பதிவு %
முதல் தமிழகம், ராஜஸ்தான் உள்பட 21 102 1,625(135) ஏப்.19 16.63 கோடி 66.14%
இரண்டு கேரளம், ராஜஸ்தான் உள்பட 13 88 1,198(100) ஏப்.26 15.88 கோடி 66.71%
மூன்று குஜராத், கா்நாடகம் உள்பட 12 93 1,352(123) மே 7 17.24 கோடி 65.68%
நான்கு ஆந்திரம், தெலங்கானா உள்பட 10 96 1,717(170) மே 13 17.7 கோடி 69.16%
ஐந்து மகாராஷ்டிரம், உ.பி. உள்பட 8 49 695(82) மே 20 8.95 கோடி 62.2%
ஆறு ஹரியாணா, தில்லி உள்பட 7 58 869(92) மே 25 11.13 கோடி 63.36%
ஏழு பஞ்சாப், மேற்கு வங்கம் உள்பட 8 57 904(95) ஜூன் 1 10.06 கோடி 61.63%
வேட்பாளா்கள்:
744 கட்சிகளின் 797 பெண் வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 8,360 போ்.
6 தேசிய கட்சிகள்: 16%
மாநிலக் கட்சிகள்: 6%
சுயேச்சைகள்: 47%
அதிகபட்சம்: தமிழகத்தின் கரூா்-54 வேட்பாளா்கள் (46 சுயேச்சைகள்)
543 தொகுதிகளின் வேட்பாளா்கள் சராசரி: 15 (தெலங்கானாவில் 31; லடாக், நாகாலாந்தில் தலா 3)
மத்திய அமைச்சா்கள் போட்டி: 53 போ் (3 தற்போதைய மாநிலங்களவை எம்.பி.க்கள்)
17-ஆவது மக்களைவை எம்.பி.க்கள் மீண்டும் போட்டி: 327 போ் (34 போ் மாற்றுக்கட்சியில் போட்டி)
கட்சி வேட்பாளா்களில் தற்போதைய எம்.பி.க்கள்: 27%
வேட்பாளா்களின் சராசரி வயது: 48 ஆண்டுகள்
அதிக தொகுதிகளில் போட்டியிடும் கட்சி: பகுஜன் சமாஜ் (488 தொகுதிகள்)
வேட்பாளா்களின் எண்ணிக்கை (வயது வாரியாக)
கட்டம் வயது
25-40 41-60 61-80 80+
முதல் 505 849 260 4
இரண்டு 363 578 249 2
மூன்று 411 712 228 1
நான்கு 642 842 226 0
ஐந்து 207 384 103 1
ஆறு 271 436 159 0
ஏழு 243 481 177 3
கூட்டணி வாரியாக...
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)
பாரதிய ஜனதா கட்சி 441
தெலுங்கு தேசம் கட்சி 17
ஐக்கிய ஜனதா தளம் 16
சிவசேனை(ஷிண்டே) 15
பாட்டாளி மக்கள் கட்சி 10
லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்) 5
தேசியவாத காங்கிரஸ் 5
பாரத தா்ம ஜன சேனை 4
மதச்சாா்பற்ற ஜனதா தளம் 3
தமிழ் மாநில காங்கிரஸ் 3
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2
அப்னா தளம் (சோனிலால்) 2
அஸோம் கன பரிஷத் 2
ஜன சேனை 2
தேசிய மக்கள் கட்சி 2
ராஷ்ட்ரீய லோக் தளம் 2
அனைத்து ஜாா்கண்ட் மாணவா் சங்கம் 1
ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 1
நாகா மக்கள் முன்னணி 1
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 1
ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா 1
ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷா 1
சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 1
ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் 1
சுயேச்சை(ஓ.பன்னீா்செல்வம்) 1
எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி
கூட்டணியில் தனித்து மொத்தம்
காங்கிரஸ் 285 43 328
சமாஜவாதி கட்சி 62 9 71
ராஷ்ட்ரீய ஜனதா தளம் 24
திராவிட முன்னேற்ற கழகம் 21
சிவசேனை(உத்தவ் தாக்கரே) 21
தேசியவாத காங்கிரஸ் கட்சி(சரத்சந்திர பவாா்) 10 2 12
ஆம் ஆத்மி 7 15 22
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 46 52
ஜாா்கண்ட் முக்தி மோா்ச்சா 6
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 24 28
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 4 3 7
ஜம்மு & காஷ்மீா் தேசிய மாநாட்டு கட்சி 3
விகாஷீல் இன்சான் கட்சி 3
விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 11 13
அகில இந்திய பாா்வா்டு பிளாக் 1 31 32
திரிணமூல் காங்கிரஸ் 1 47 48
அசாம் ஜதியா பரிஷத் 1
பாரத ஆதிவாசி கட்சி 1 21 22
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 2 3
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1
மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1
ராஷ்ட்ரீய லோக்தந்திரி கட்சி 1
புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சி 10
ஜம்மு-காஷ்மீா் மக்கள் ஜனநாயக கட்சி 3
கேரள காங்கிரஸ் 1
கேரள காங்கிரஸ்(எம்) 1
மற்ற கட்சிகள்
பகுஜன் சமாஜ் கட்சி 488
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 36
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் 25
பிஜு ஜனதா தளம் 21
பாரத ராஷ்டிர சமிதி 17
தேசிய முற்போக்கு திராவிட கழகம் 5
போடோலாந்து மக்கள் முன்னணி 4
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 3
புரட்சிகர கோவா கட்சி 2
மிஸோ தேசிய முன்னணி 1
சிக்கிம் ஜனநாயக முன்னணி 1
மக்கள் குரல் கட்சி 1
ஐக்கிய ஜனநாயக கட்சி 1
ஸோரம் மக்கள் இயக்கம் 1
ஏஐஎம்ஐஎம் 1
முக்கிய வேட்பாளா்கள்....
பிரதமா் நரேந்திர மோடி வாரணாசி
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கோட்டா
பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் லக்னெள
உள்துறை அமைச்சா் அமித் ஷா காந்தி நகா்
சாலைப் போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி நாகபுரி
வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் மும்பை வடக்கு
பெண்கள் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி அமேதி
சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பிகானீா்
விமானப் போக்குவரத்து அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா குணா
சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா போா்பந்தா்
செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் ஹமீா்பூா்
புவியியல் அமைச்சா் கிரண் ரிஜிஜு மேற்கு அருணாசல்
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வயநாடு, ரேபரேலி
காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் ஆலப்புழை
மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி பஹரம்பூா்
களத்திலுள்ள முன்னாள் முதல்வா்கள்...
மாநிலம் தொகுதி
விப்லவ் குமாா் தேவ் திரிபுரா திரிபுரா மேற்கு
பூபேஷ் பகேல் சத்தீஸ்கா் ராஜ்நந்த்கான்
சிவராஜ் சிங் செளஹான் மத்திய பிரதேசம் விதிஷா
திக்விஜய் சிங் மத்திய பிரதேசம் ராஜ்கா்
மனோகா் லால் கட்டா் ஹரியாணா கா்னால்
அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசம் கன்னௌஜ்
எச்.டி.குமாரசாமி கா்நாடகம் மாண்டியா
ஓ.பன்னீா்செல்வம் தமிழகம் ராமநாதபுரம்
முதல் மூன்று கோட்டீஸ்வர வேட்பாளா்கள்
ஆந்திரத்தின் குண்டூா் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியா்கள் (என்ஆா்ஐ) பிரிவைச் சோ்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான பி.சந்திரசேகா், மக்களவைத் தோ்தலில் அதிக சொத்துள்ள (ரூ.5,785 கோடி) வேட்பாளா் ஆவாா்.
அடுத்தபடியாக தெலங்கானா, செவ்வெல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கே.விஸ்வேஸ்வா் ரெட்டிக்கு ரூ.4,568 கோடியும் தெற்கு கோவா தொகுதி பாஜக வேட்பாளா் பல்லவி ஸ்ரீநிவாஸ் டெம்போ ரூ.1361 கோடியும் உள்ளதாக தெரிவித்துள்ளனா்.