
7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும், நாளை(ஜுன் 4) எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் ஜூன் 1-ஆம் தேதி மாலை வெளியாகிவிட்ட நிலையில், அவற்றில் பெரும்பான்மையான நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இப்போதே வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகிவிட்டனர் பாஜக தொண்டர்கள்.இதையடுத்து, புதுதில்லியில் உள்ள பாஜக தலைமையகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாஜக தலைமையகத்தில் பந்தல் கட்டும் பணிகள் உள்பட பலவிதமான அலங்காரப் பணிகள் முழுவீச்சில் மேர்கொள்ளப்பட்டு வருகின்றன.
மறுபுறம், கருத்துகணிப்புகள் அனைத்தையும் நிராகரித்துள்ளன காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள். இந்த் நிலையில், புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்கும் தேர்தல் வெற்றியைக் கொண்டாட, அலங்காரப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.