
மக்களவைத் தேர்தலின் பிந்தையக் கருத்துக்கணிப்பு முடிவுகள் முற்றிலும் மாறுபடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்த நிலையில், அன்று மாலை கருத்துக்கணிப்புகள் வெளியாகின. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெறும். மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.
இதுதொடர்பாக சோனியா கூறியதாவது,
கலைஞர் பிறந்தநாளையொட்டி திமுக தோழர்களுடன் அவருக்கு மரியாதை செலுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி. பல சந்தர்ப்பங்களில் கருணாநிதியைச் சந்தித்து அவரின் உரையைக் கேட்டது, அவரின் அறிவுரைகளால் பலனடையும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நம்பவேண்டாம். கருத்துக் கணிப்பு முற்றிலும் மாறுபடும், தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதமாக இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது. நாம் காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இந்த கருத்துக்கணிப்பு மோடி ஊடகத்தின் கணிப்பு. இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனக் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
தில்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். இந்த நிகழ்வில் மல்லிகார்ஜுன கார்கே, எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.