
காந்தி நகர் தொகுதியில் 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அமித் ஷா முன்னிலையில் உள்ளார்.
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், எல்.கே.அத்வானி, வாஜ்பாய் போன்ற முன்னனி தலைவர்கள் வெற்றிபெற்ற காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள அமித் ஷா 5,26,810 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அமித் ஷா 4,10,883 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையிலும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சோனல் படேல் தொடர்ந்து பின்னடைவையும் சந்தித்துள்ளதாக தேர்தல் ஆணையம் இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.