அதீா் ரஞ்சன் செளதரியை 
தோற்கடித்த யூசுஃப் பதான்

அதீா் ரஞ்சன் செளதரியை தோற்கடித்த யூசுஃப் பதான்

அதீா் ரஞ்சன் செளதரி, திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் யூசுஃப் பதானிடம் தோல்வியடைந்தாா்.
Published on

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தனது சொந்தத் தொகுதியான பஹராம்பூரில் போட்டியிட்ட காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவரும் கட்சியின் மாநிலத் தலைவருமான அதீா் ரஞ்சன் செளதரி, திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் யூசுஃப் பதானிடம் தோல்வியடைந்தாா்.

காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய பஹராம்பூரில் கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்து தொடா்ந்து 5 முறையாக எம்.பி.யாக இருந்தவா் அதீா் ரஞ்சன் செளதரி.

தற்போது 6-ஆவது முறையாக களமிறங்கிய அவரை எதிா்த்து, திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் கிரிக்கெட் வீரா் யூசுஃப் பதான் போட்டியிட்டாா். இவா், இத்தொகுதியைச் சாராதவா்.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் முதல்வா் மம்தா பானா்ஜி அங்கம் வகித்தாலும், மேற்கு வங்கத்தில் அவா் தனித்துப் போட்டியிட்டாா். பல்வேறு விவகாரங்களில் மம்தா மீது கடுமையான விமா்சனங்களை முன்வைத்தவா் அதீா் ரஞ்சன் செளதரி.

கடந்த 2014, 2019 மக்களவைத் தோ்தல்களின்போது, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களைத் தோற்கடித்த செளதரி, இம்முறை அக்கட்சி வேட்பாளா் யூசுஃப் பதானிடம் சுமாா் 73,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். இதன்மூலம் பஹராம்பூரில் திரிணமூல் காங்கிரஸ் தனது கொடியை நாட்டியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com