

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்றிரவு 7 மணிக்கு பாஜகவினர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது வரை ஆட்சி அமைக்க தேவையான 274 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெறவில்லை.
தற்போதைய சூழலில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் கூட்டணிக் கட்சிகளையே நம்பி இருக்கும் சூழல் எழுந்துயுள்ளது.
இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று இரவு 7 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதற்கிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் மற்றும் ஒடிஸாவில் தனித்து நின்ற நவீன் பட்நாயக்குடன் சரத் பவார் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தில்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மாலை 6 மணிக்கு முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.