ஜூன் 9-ல் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கும் சந்திரபாபு நாயுடு!
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக ஜூன் 9-ம் தேதி பொறுப்பேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திரத்தில் உள்ள சட்டப் பேரவை தொகுதிகள் 175-ல் 158 தொகுதிகளில் தெலுங்கு தேசம் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சி முன்னிலை வகிக்கிறது.
ஆந்திரத்தில் ஆட்சியமைப்பதை உறுதி செய்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் 1995 முதல் 2004 வரை அவர் முதல்வராக பதவி வகித்தார்.
2014-ல் தெலங்கானா பிரிந்த பிறகான ஆந்திர பிரதேசத்தில் முதல்முறையாக முதல்வராக அவர் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.
நடிகர் பவண் கல்யாண் மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்த சந்திரபாபு நாயுடு 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
கூட்டணியாக இல்லாமல் தனித்து 131 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது தெலுங்கு தேசம் கட்சி.
25 மக்களவை தொகுதிகளில் 16-ல் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. கூட்டணியாக 21 தொகுதிகளில் தேஜகூ முன்னிலை வகிக்கிறது.
2019-ல் தெலுங்கு தேசம் ஒட்டுமொத்தமாக 23 சட்டப்பேரவை தொகுதிகளையும் 3 மக்களவை தொகுதிகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.