
ஜம்மு - காஷ்மீரில் இரண்டு முன்னாள் முதல்வர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா காலை 11 மணி நிலவரப்படி 52,634 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக் 98,859 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதேபோல், அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி 80,476 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளர் மியான் அல்தாஃப் அஹ்மத் 1,81,898 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
ஜ்ம்மு - காஷ்மீரில் உள்ள 5 மக்களவைத் தொகுதியில் பாஜக 2, தேசிய மாநாட்டு கட்சி 2, சுயேச்சை ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.