மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்!
மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். மக்கள் அவரை நிராகரித்துவிட்டனர்..


பிரதமர் நரேந்திர மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 543 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சஞ்சய் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களுக்கும் குறைவாகவே பெறும். மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். மக்கள் அவரை நிராகரித்துவிட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, பாஜக 250 தொகுதிகள் பெற்று முன்னிலையிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 230 தொகுதிகள் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...